பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நீடித்து இருந்த தொகுப்பாளர்களை ஓரம் கட்டி முன்னிலைக்கு வந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் துணை தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின் தனித்து தொகுத்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தார். இவர் விஜய் டிவியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் விஜய் டிவியில் பணிபுரியும் முன்பு ஜீ தமிழ், சன் டிவி குழுமம்த்தில் உள்ள தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா, தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் போல் இவர் போட்டோ ஷூட் எடுப்பதில் களம் இறங்கி விட்டார். இந்நிலையில் இவர் தற்போது தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் அணிந்து எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



