இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் மணிமேகலை. இவர் சினிமாவில் துணை நடன இயக்குனராக பணிபுரியும் ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர் பெற்றோர் இவருடன் பேசுவதில்லை.
இதனால் தனியாக வசித்து வரும் இவர் தற்போது ஊரடங்கு காரணமாக கிராமம் ஒன்றிற்கு சென்ற இவர் தற்போது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே செட்டில் ஆகி விட்டார். தினமும் முறுக்கு சுடுவது, அங்குள்ள பிழைகளுடன் விளையாடுவது என பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. இவரது பிறந்தநாளை ஹுசேன் மிகவும் மாஸாக கொண்டாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. இதோ அந்த வீடியோ.