சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஒரே தொலைக்காட்சியில் வெற்றி தொகுப்பாளராக பணியாற்றுபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் பள்ளி படிக்கும் போதே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிய ஆரம்பித்து விட்டார்.
தற்போது டிடி Ph .d வரை முடித்துள்ளார். மேலும் பல வருடங்களாக தொகுப்பாளராகவும் நீடித்து வருகிறார். இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேல்ஸ், காபி வித் டிடி, அன்புடன் டிடி, எங்ககிட்ட மோததே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் டிடிக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர், அவர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி உள்ளன.
சமீபத்தி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணிற்கு பச்சை நிற கில்டரை பயன்படுத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார், இதில் பார்ப்பதற்கு வெளிநாட்டு பெண்கள் போலவே டிடி உள்ளார் என்றும், ஏன் இந்த திடீர் மாற்றம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.