Wednesday, November 13, 2024
-- Advertisement--

கொரானாவிற்கு பலியான 22 வயது ஆம்புலன்ஸ் ஊழியர்..!! வீட்ல அவர் சொல்லவே இல்லையாம்..!!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த வைரஸ் அனைவரையும் தாக்குகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் முறையாக 22 வயது வாலிபர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார். இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிபவர்.

திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக இவருக்கு வேலை கிடைத்து இருக்கின்றது. திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து அவிநாசிபாளையம் ஆம்புலன்ஸில் இவர் டெக்னீசியன் ஆக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வேலை பார்த்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக ஊருக்குச் செல்லாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பெற்றோர்களை பார்ப்பதற்காக ஜூன் 7ம் தேதி சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திருப்பூர் திரும்பியுள்ளார்.

வந்த ஒரு சில நாட்களில் இவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வதற்காகச் சென்றார். அங்கு அவருக்கு பாஸிட்டிவ் முடிவு வர என அதிர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கோகோவையில் சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி அவரை வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். தனது நண்பர்களுடன் வீதி வீடியோகால் மூலம் பேசியுள்ளார்.
நன்றாகத்தான் இருக்கிறேன் விரைவில் குணமடைந்து விடுவேன் என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் அவர் ஒரு வித பயத்துடனே இருந்துள்ளார். திடீரென்று அவருக்கு மூச்சு அடைப்பு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

குரானா பாசிட்டிவ் என்ற செய்தியை அவர் தன் வீட்டிற்கு சொல்லவில்லை. வீட்டில் சொன்னால் பயந்து விடுவார்கள் என்று அவர் இந்த செய்தியை கூறவே இல்லையாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles