நாட்டின் சிறந்த அழகி என்ற பட்டம் பெற்ற ஒருவர் 15 வயது சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் முன்னால் அழகி பட்டம் வென்றவர் மற்றும் இவர் ஒரு ஆசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் திருமணம் ஆனவர். அமெரிக்காவின் ரெஜினாவின் கவுண்டியில் இருக்கும் ஆண்ட்ரூ ஜாக்சன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் ராம்சே கார்பென்டர் பெர்சி.
ராம்சே கடந்த 2011 ஆம் ஆண்டு மிஸ் கென்டுகி பட்டத்தை வென்றார். கென்டுகி யூனிவர்சிட்டியில் இவர் பட்டம் பெற்றுள்ளார். திருமணமான இவர் கடந்த 2008ம் ஆண்டு திடீரென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னால் அழகியாக இருந்த இவர் கைது செய்தது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் விசாரணையில் இவர் பள்ளியில் படிக்கும் 15 வயது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாணவனின் செல்போனை பெற்றோர் எதிர்பாராதவிதமாக பார்த்த பொழுது அதில் ராம்சேவின் மேலாடை இல்லாத புகைப்படங்கள் இருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அதிர்ச்சியுற்றனர்.
இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளமான ஸ்நாப் ஷாட் மூலம் இவர் அந்த மாணவனுக்கு அனுப்பி உள்ளார் என்பதும் பெற்றோர் நடத்திய விசாரணையில் இவர் இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் எனது செயல்களுக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், இதற்காக நான் வருந்துகிறேன் எனவும் அவர் கூறியுள்ளா. ர் நான் இதற்கு முன்பு இது போன்று எதையும் செய்யவில்லை இதன்பின் இது மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து உள்ளார்.
இந்த வழக்கு காரணமாக மிகுந்த மனச் சோர்வு அடைந்துள்ளதாகவும், நான் விடாமுயற்சியோடு பணியாற்றி வந்த என் வேலையும் நான் இழந்து விட்டதாகவும் அவர் மன வருத்தத்துடன் கூறியுள்ளார். இதை அடுத்து இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.