சர்ச்சையான படத்தில் மூலம் அறிமுகமானவர் அமலா பால். சிந்து சமவெளி என்னும் முரண்பாடான கதையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் அமலா பாலுக்கு நல்லதொரு பெயர் கிடைத்தது.

தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்து வண்ணம் இருந்தன. முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஓரிரு வருடங்களிலேயே விவாகரத்தில் முடிவடைந்தது.

அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்த அமலா பால் சில வருடங்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் கால நண்பருடன் லிவ்விங் டு கெதர் முறையில் இருந்தார். அந்த காதலும் கசந்து போனது. லிவ்விங் டு கெதர்ரில் இருந்த தன் காதலன் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்பொழுது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அமலபால் சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் பாலிதீவில் ஒரு ஆசிரமத்தில் தங்கி உள்ளார்.

அங்கு யோகா, ஆன்மீக தியானம், ஆன்மீக வழிபாடு ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
















