ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹச். வினோத் இயக்குகிறார்.
அஜித்தின் 61வது திரைப்படம் பூஜையுடன் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித் சமீபத்தில் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றடைந்தார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
அதோடு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பேங்கில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.
தற்போது அஜித்துடன் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித் நடிக்கும் 61 வது படத்திற்கான லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.