Friday, May 3, 2024
-- Advertisement--

குடும்பத்தினருடன் விஜயின் பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்க்கவந்த அஜித் குடும்பம்…!!! யார் யார் வந்தார்கள் தெரியுமா.

நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி முக்கியமான திரைப்படங்களை திரையரங்குக்கு சென்று பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை காண தனது மகள், மகனுடன் சென்று திரைப்படத்தை பார்த்து உள்ளார். நடிகை ஷாலினி முன்னணி நடிகையாக இருந்தபோது நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரை உலகை விட்டு சற்று ஒதுங்கி குடும்பத்தினை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை ஷாலினி மகன் மற்றும் மகளுடன் இணைந்து சத்யம் திரையரங்கில் பார்த்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ஷாலினி விஜயுடன் இணைந்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles