Monday, May 20, 2024
-- Advertisement--

செம ஸ்டைலாக இருக்கும் அஜித்..!!! இணையத்தில் வெளிவந்த வலிமை படத்தின் புகைப்படங்கள்.

வலிமை வருகின்ற பொங்கல் தினத்தன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைய போகும் அஜித்தின் திரைப்படம். அஜித்தின் திரைப்படங்கள் வரும்போது எப்போதும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அஜித் திரைக்கு வந்தாலே போதும் அவரைப் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று கூறுகிற ரசிகர்களும் இன்றும் இருக்கிறார்கள்.

உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் எனது ரசிகர்களுக்காக எந்த ரிஸ்க் காட்சியிலும் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இன்றுவரை ரிஸ்க்கான காட்சிகளில் தானே முன்வந்து நடித்து வருகிறார்.

1000 சிசி வண்டியை அதி வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து வீலிங் செய்யும் காட்சியில் அந்த வண்டி அஜித் மேலே விழுந்து காயத்தையும் ஏற்படுத்தியது அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அஜித் அந்த காட்சியை மறுபடியும் எடுத்த பின்பு தான் ஓய்வு எடுக்க சென்றாராம். வலிமைக்கு வலிமை சேர்த்து அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தான் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் வலிமை இயக்குனர் ஹ வினோத்.

வலிமை படத்தின் ட்ரெய்லரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் வலிமை படத்திலிருந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். வெளியான புகைப்படங்களில் செம ஸ்டைலாக கூலர் அணிந்து செம மாஸ்ஸாக இருக்கிறார் அஜித். இதோ வலிமை படத்தின் புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles