Monday, May 20, 2024
-- Advertisement--

1000CC பைக்கில் படுவேகமாக வந்து வீலிங் செய்த அஜித்..!!! நிலைதடுமாறி பைக் அஜித் மேல் விழுந்த வீடியோ..!!! ஷாக் ஆன வலிமை படக்குழுவினர்.

அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இவரின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை போன்ற வெற்றி படங்களை நமக்கு கொடுத்த ஹ வினோத் தான் அஜித்தின் அடுத்த படமான வலிமை இப்படத்தை இயக்கி உள்ளார்.

வலிமை படத்தின் சூட்டிங் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கொரோனா தொற்று அதிகமானதால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அதன்பின் அந்தப் படத்தில் பணிபுரிந்த ஆர்டிஸ்ட் சிலர் மற்ற படங்களில் கமிட்டானார்கள்.

கொரோனா வந்ததால் வலிமை படத்தில் நடித்த பல ஆர்ட்டிஸ்டுகள் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் படக்குழுவினர் ரசிகர்களிடம் என்ன சொல்வது என்று புரியாமல் வாய் திறக்காமலே இருந்தனர் அதன்பின் COVID குறைவிற்கு பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமானது.

அஜித் எது ஆனாலும் சரி நம்முடைய முயற்சியையும் நம்பிக்கையும் விடவேண்டாம் என்று படக்குழுவினரிடம் கூறியுள்ளார் அதன் பின் மீண்டும் இரவும் பகலுமாக வலிமை படத்திற்காக உழைக்க ஆரம்பித்தனர் படக்குழுவினர். பல ரிஸ்க் ஆட்சியில் அஜித் நடித்து உள்ளார் குறிப்பாக அவர் 1000cc வண்டியில் படுவேகமாக ஓட்டி வந்து WHEELING செய்யும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

அப்பொழுது பயங்கர வேகமாக வந்த அஜித் WHEELING செய்வதற்காக பைக்கை மேலே தூக்க அஜித் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் மீது பைக் விழுந்தது பதறிப் போய் ஓடி சென்று அஜித் அவர்களை தூக்கி உள்ளார்கள் படக்குழுவினர் அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது அதன் வலியை தாங்கிக் கொண்டு மீண்டும் அந்த காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத். சூட்டிங் முடிந்த பின் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

தற்பொழுது அஜித்தின் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியானது அதில் வலிமை படத்திற்காக எதிர்கொண்ட சோதனைகள் வலிகள் அனைத்தையும் பதிவு செய்து இருந்தனர் அதில் அஜித் பைக் விபத்து எப்படி ஏற்பட்டது என்று காட்டப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் அஜீத் மேல் பைக் விழுந்தது மட்டும் காட்டியுள்ளார்கள் உண்மையில் அவருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாக கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தினர்.

வலிமை மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியிட்ட சில மணிநேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று உள்ளது.

Valimai Making Video

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles