Sunday, May 19, 2024
-- Advertisement--

தாஜ்மகாலை சுற்றி பார்த்த காதல் மன்னன் தல அஜித்..!!! செல்பி எடுத்து கொண்ட பொதுமக்கள். புகைப்படங்கள் இதோ.

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்த நடிகர். ரசிகர் மன்றங்கள் வேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது பெரிய ஆச்சரியம்தான்.

தடுமாற்றத்தில் இருந்த தனது சினிமா கேரியரை மங்காத்தா என்ற படத்தின் மூலம் தூக்கி நிறுத்திக் கொண்டு தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் தல அஜித். விஜய் சென்ற கமர்சியல் பாணியை ஆரம்பத்தில் விரும்பாத அஜித் தற்போது கமர்சியல் படங்கள் தான் நல்ல பிசினஸ் தருகிறது என்று சரியாக புரிந்து கொண்டு மாஸ்ஸான படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்து வருகிறார்.

கமர்சியல் படங்களில் நடித்தாலும் எந்த அளவிற்கு தன்னால் முடிந்தவரை அந்த படத்திற்காக உழைக்க முடியுமோ உழைத்துக் கொடுக்கிறார் மனிதர். சில சண்டைக் காட்சிகளை தாமாக முன்வந்து டூப் இல்லாமல் நடித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வியப்படைய வைத்து வருகிறார்.

தற்போது தல அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் வலிமை படம் பற்றி ஒரு சில நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது வலிமை அஜித் சாருக்கு நல்ல தினியான படமாக வந்திருக்கிறது. சில காட்சிகளில் கண்டிப்பாக விசில் பறக்கும் குறிப்பாக பைக் ரைட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அஜித் சாரின் உழைப்பு ஸ்க்ரீனில் தெரியும் இதை தாண்டி இப்போதைக்கு சொல்ல கூடாது என்று கூறி உள்ளனர்.

அஜித் பைக் பயணம் செய்வதை வழக்கமாக வைத்து இருப்பவர். பைக்கில் பல்லாயிரம் தூரம் பயணம் செய்து வருகிறார். பல இடங்களை சுற்றிப் பார்த்து வருகிறார் நேற்று ஆக்ராவில் சென்று தாஜ்மஹாலை பார்வையிட்டார் அஜித் வந்ததை அறிந்த சில பொதுமக்கள் அஜித்திடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles