Monday, May 6, 2024
-- Advertisement--

தல உடம்ப பாத்துக்கோங்க அது போதும் எங்களுக்கு ரசிகர்கள் உருக்கம் ..!!! அஜித்தின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த பின் ரசிகர்கள் அன்பு கோரிக்கை..!!!

அஜித் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித் விஜய் இந்த இரண்டு துருவங்கள் தான் சூப்பர் ஸ்டார்கள். விஜய்க்கும் அஜித்துக்கும் எந்த ஒரு விரோதமும் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை ஆனால் இவர்கள் இருவர் மத்தியில் தொழிலில் போட்டி உள்ளது என்பது மட்டும் தான் உண்மை.

சமீபத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் என்பவர் அளித்த பேட்டியில் அஜித் ரொம்ப நல்லவர் அவருக்கு கதை சொல்வதற்காக விஜயின் மற்றொரு நண்பர் ஸ்ரீநாத் அவர்களை அழைத்துக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன் அப்பொழுது பிஸியாக இருந்த அஜீத் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை உபசரித்து அதன்பின் கதையைக் கேட்டார். விஜயின் நண்பர் என்று தெரிந்த பின்னும் சகஜமாக பேசிய அஜித் ஒரு நாள் உங்கள் நண்பரை நான் ஜெயிக்கணும் அதுதான் என் ஆசை என்று வெளிப்படையாகக் கூறினார்.

ajith shalini in vijay marriage reception

எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் இருந்த அஜித்-விஜய் தொழில் போட்டியை நன்றாக புரிந்து கொண்ட இயக்குனர்கள் விஜய் படத்தில் அஜீத்தை தாக்கியும் அஜித் படத்தில் விஜய் அஜீத் படத்தில் விஜயை தாக்கியும் வசனங்கள் வைத்து வந்தனர். அந்த நேரத்தில் இயக்குனர்களே விஜய் அஜித்திற்கு மோதலை ஏற்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட அஜித் விஜய் தங்களது ஒற்றுமையை படத்தில் காட்டி வந்தனர். வேலாயுதம் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையில் விஜய் அமர்ந்திருக்கும் பொது விளையாடு மங்காத்தா என்று அஜித் பட பாடல் ஒலிக்கும் அதுபோல மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் அஜீத் தியேட்டருக்கு செல்லும் போது விஜய்யின் காவலன் படம் ஓடிக்கொண்டிருக்கும் இதுபோன்ற காட்சிகளை வைத்து ரசிகர்களை ஒற்றுமையாக இருக்க வைத்தார்கள் ஆனால் இன்று வரை ரசிகர்கள் சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மங்காத்தா பட சூட்டிங் ஸ்பாட்டில் கூட விஜய் கிப்ட் ஆக கொடுத்த கடிகாரத்தை தான் அஜித் கட்டி இருந்தாராம். அதுபோல விஜயும் அஜித்தும் சகஜமாக தான் இருக்கிறார்கள் அவர்களுடைய பெயரை பயன்படுத்திக் கொண்டு எதற்காக சண்டை போடுகிறார்கள் ரசிகர்கள் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட அஜீத் நடிப்பில் வெளியான காதல்கோட்டை படத்தின் கதையை விஜய்யே சொல்வது போல ஒரு காட்சி இருந்தது.

தற்பொழுது வலிமை பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் அஜித் இரவும் பகலுமாக சூட்டிங் செல்கிறாராம். வலிமை பட சூட்டிங்கில் கலந்து கொண்ட அஜித் சாலையோர கடைகளில் பைக்கில் சென்று சாப்பிட்டு வந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சாலையோர உணவகங்கள் வைத்து நடத்துவோர் பிள்ளைகளின் படிப்பிற்காக மொத்தமாக ஒரு இலட்சத்தையும் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வலிமை படம் எப்படி வந்திருக்கிறது என்று ரசிகர்கள் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் படக்குழுவினரிடம் அப்டேட் கேட்டு அலுத்துப் போய் விட்டனர் அஜித் ரசிகர்கள்.

தற்பொழுது வலிமை பட சூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்தின் புகைப்படங்கள் வெளிவந்து உள்ளது. வலிமை படத்திற்காக அஜித் எப்படி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த புகைப்படத்தில் அவரது முகத்தைப் பார்த்தாலே தெரியும். அந்த அளவிற்கு அஜித் பிஸியாக இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க உடம்ப பாத்துக்கோங்க என்று அன்புக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles