Wednesday, May 1, 2024
-- Advertisement--

யோகிபாபுவின் இந்த புகைப்படத்தை தல அஜித் எடுத்தாரா..!!! வெளியான புகைப்படம்.

யோகி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனதால் தனது பெயரை யோகி பாபு என்று மாற்றிக்கொண்டவர். தொடர்ந்து பல வருடங்களாக சினிமாவில் பத்தோடு பதினொன்றாக முகம் தெரியாத வரிசையில் காமெடி காட்சியில் நின்றவர். அவருடைய முகத்தையும் தலையையும் பார்த்து கிண்டல் செய்தவர்கள் ஏராளம்.

அவமானங்களை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இடைவிடாமல் முயற்சி செய்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பட போஸ்டரில் நடிகர் நடிகை வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் யோகி பாபுவின் படத்தையும் போஸ்டரில் போடுங்கள் அதை பார்த்து மக்கள் படத்திற்கு வருவார்கள் என்று சொல்லும் அளவிற்கு அல்லது அவரது வளர்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபுவின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் அவர் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. அதுபோல தமிழில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யோகி பாபு தன்னுடைய சொந்த உழைப்பில் வீடு ஒன்றை கட்டினார் ஆனால் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு கூட யோகிபாபுவால் வீட்டில் இருக்க முடியவில்லை காரணம் அவர் ஏற்கனவே கொடுத்த சில படங்களில் கால்சீட் தான்.

அந்த அளவிற்கு பிசியான யோகி பாபுவை தளபதி விஜய் அவர்கள் சர்கார் இசை வெளியீட்டு விழா மேடையில் கூட கலாய்த்து இருப்பார் வீடு யார் வேணாலும் கட்டலாம் யோகி அனா தாலி நீங்கள் தான் கட்டணும் என்று ஜாலியாக கலாய்த்து இருப்பார்.

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி யோகிபாபு பற்றி பெருமையாக பேசிய மிக விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார் அவர் கூறியபடியே யோகி பாபு திருமணம் நடந்தது.

ரஜினி விஜய் அஜித் என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் யோகி பாபு. தமிழ் திரையுலகில் யோகி பாபுவை பற்றி கேட்டால் நல்ல மனுஷன்ப்பா குறுகிய காலத்திலேயே அவன் நன்றாக சம்பாதித்தான் பிறருக்கு நிறைய நல்லது செய்து வருகிறான் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

யோகி பாபு தல அஜித்தின் வேதாளம் என்ற படத்தில் நடித்திருந்தார் அப்பொழுது தல அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகிபாபுவை புகைப்படம் எடுத்து உள்ளார் அதனை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார் யோகி பாபு. அந்த புகைப்படத்தில் அஜித் கேமராவால் புகைப்படம் எடுக்க மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு போஸ் கொடுத்து உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles