Tuesday, May 7, 2024
-- Advertisement--

சிம்புவுடன் கூட்டணி என்னாச்சு…!!! புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிப்பினை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. யாருடன் கூட்டணி தெரியுமா?

நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக செய்திகள் இணையதளத்தில் சென்ற வாரம் வைரலாக பரவி வந்தன. இந்தநிலையில் ஐஸ்வர்யா தனது அடுத்த பிராஜக்ட் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்து இருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதோடு இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் கொக்கி குமாராக நடித்து அசத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியானது.

இதை அறிந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார். அதோடு சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த பிராஜக்ட் பற்றி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லாரன்ஸுடன் படம் இயக்கப் போகிறாரா இல்லை மியூசிக் ஆல்பமா என தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சிம்புவுடன் இயக்கும் படம் என்னாச்சு என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles