தற்போது லாக்டவுனில் இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி மற்றும் நடிகையான சுகாசினி மணிரத்தினத்திடம் கேக்க கூடிய கேள்விகளை தங்களது சுய அறிமுகத்தோடு வீடியோவாக எடுத்து அனுப்பினால் அந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார் என்ன தெரிவித்து இருந்தார்.
அப்போது ரஜிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் “மணிரத்னம் நடிக்க வேண்டும் என்ன அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு முற்றிலுமாக நிராகதித்தது போல் ஒரு இயக்குனராக படங்களில் நடித்து விட்டு சென்றால் நடிகர்கள் என்னிடம் நீங்கள் எப்படி நடிக்கிறீர்கள் ? என்று என்னிடமே கேள்வி கேட்பார்கள், அதுவே நான் என்னுடைய வேலையை மட்டும் செய்தல் எனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பிற நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்கவிடுவேன்” எனமிகவும் புத்திசாலித்தனமாக பதில் அளித்துள்ளார் மணிரத்தினம்.