அண்மையில் ஊரடங்கு காரணமாக பழைய செய்திகள், பழைய பெட்டிகள் எல்லாம் தூசி தட்டி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மனைவி ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேசியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு சூர்யா தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு விஜய் சேதுபதி கூட சிறப்பு என்று ட்விட் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கோயில்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில் கோயில்களில் உள்ள கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வதை காண்பிக்கும் போது ஏன் அலங்காரத்தை காண்பிப்பதில்லை, என கேட்டு உள்ளார்.
இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து
அகில இந்திய இந்து மகா சார்பாக இவர் மீது புகார் அளிக்க பட்டுள்ளது, மேலும் இவர்கள் விளம்பரம் படுத்தி கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா ? எனவும் கூறப்பட்டுள்ளது.