சமீபத்தில் தளபதி விஜயின் வாரிசுப் படம் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து தளபதி 67 படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும், படத்தின் தகவல் குறித்து பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.

இந்தப் படத்தை ட்ரெண்டிங் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் பட குழுவை பற்றி அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர். ஒவ்வொரு அறிவிப்பாக இணையத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்பொழுது தளபதி விஜயின் 67 படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்று அதிகார அறிவிப்பு வந்துள்ளது.

தளபதி விஜய் பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்த நடித்துள்ளார், சமீப காலமாக முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை விட்டுவிட்டு புதுகதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பாரா என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் அதற்கான உறுதி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று டிவிட்டர் பக்கத்தில் 14 வருடங்களுக்கு பிறகு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் மற்றும் திரிஷா தளபதி 67 படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்று அறிவித்துள்ளது.

இது ரசிகர்களை குஷியாகியுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த கில்லி, குருவி போன்ற படங்களில் இரண்டு பேரின் ஜோடியும் பெருமளவு பேசப்பட்டது. அந்த வகையில் இந்த படமும் மாபெரும் அளவில் இவர்கள் ஜோடி பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
