Saturday, May 18, 2024
-- Advertisement--

பட வாய்ப்பு கிடைக்காததால் வெப் தொடரில் அறிமுகமாகும் நடிகை திரிஷா…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். நடிகை த்ரிஷாவிற்கு இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அவர் இறுதியாக நடித்து வெளியான 96 திரைப்படத்தில் நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது புதிய அவதாரமாக நடிகை த்ரிஷா வெப் தொடரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக சினிமாத்துறையில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. இதனால் வெப் தொடர்களுக்கும் பெரிதளவில் மக்களிடையே பிரபலமானது. வெப் தொடர்களில் நடிக்க நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டினர்.

அதோடு நடிகர் நடிகைகளுக்கும் சினிமாவை விட தொடர்களில் சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டது. இதன் காரணத்தால் நடிகைகளின் பார்வை வெப்சீரிஸ் மாறியது. அதோடு வெப் தொடர்களில் முன்னணி நடிகர்களான மீனா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சோனியாஅகர்வால், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர்.

தற்போது தென்னிந்திய பிரபல நடிகையான திரிஷா வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திரிஷாவின் வெப் தொடரின் பெயர் பிருந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தெலுங்கில் உருவாகிறது. அதோடு தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles