20 வருடங்களாக ஹீரோயினாக இருக்கும் திரிஷா முதலில் நடித்த படம் லேசா லேசா இல்லை..! இந்த படம் தான் முதல் படம்..!

தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து 20 வருடங்களாக கதாநாயகியாக நீடிப்பவர் நடிகை திரிஷா, இதுவரை நீண்ட காலம் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகைகள் உள்ளனர், அவர்கள் சில காலம் தாண்டியதும் துணை நடிகையாக மாறி விடுவார்.

ஆனால் தொடர்ந்து கதாநாயகியாக இருப்பதோடு முன்னணியிலும் இருந்து வருகிறார் திரிஷா. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, கமல் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுகு சினிமாவிலும் இவர் தான் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 96 படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு நிறைய விருதையும், புகழையும் இவருக்கு கொடுத்தது.

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவால் முதல் முட்டைகளில் அறிமுகம் ஆனது லேசா லேசா படம் இல்லை, இந்த படத்திற்கு முன்னரே ஜோடி என்ற படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உள்ள வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.