Sunday, May 19, 2024
-- Advertisement--

கடவுள் கேட்டதை கொடுக்கலானாலும் பரவாயில்லை..! கிழித்து என் முகத்தில் எறிந்தார்..! குமுறும் பிரியாபவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். இவர் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

இவர் நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படம் மூலம் தமிழ் சினிமாவால் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து மான்ஸ்டர், கடை குட்டி சிங்கம் , மாபியா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் போன வருடம் சித்திர பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று விடுதல் முடித்து வந்தேன், ஆனால் ஒன்றும் மாறாமல் கடவுள் கேட்டதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் திருப்பி கிழித்து முகத்தில் எரிந்து எல்லோரையும் தனிமையில் இருக்க வைத்து விட்டார். இரண்டு சித்திரா பௌர்ணமிக்குள் எல்லாமே மாறிவிட்டது என்று ஒரு நீண்ட தன மன குமுறலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்களும் அவர் அவர்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்😀 ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles