தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் டாப்சி நேர்காணல் ஒன்றில் தனது தாயாருடன் கலந்து கொண்டுள்ளார் அதில் தன் காதலன் யார் என்ற செய்தியைத் தன் தாயார் முன்னரே தெரிவித்துள்ளார் டாப்சி. டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயே என்பவரை காதலிப்பதாக ஒப்புக்கொண்டார் .

மேலும் இந்த காதலுக்கு என் தாய் மற்றும் சகோதரி யின் ஒப்புதல் வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் இந்த காதலுக்கு பயனில்லை எனவும் அவர் கூறினார். இதை கேட்டவுடன் தாயார் நான்தான் முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் இந்நிலையில் சினிமா பட பாணியில் தன் தாயாரின் முன்னிலையில் தன் காதலரை உலகிற்கு அறிமுகப் படுத்தியது சினிமா வட்டாரங்கள் இடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
