சமீபத்தில் கொரானோ தடுப்பு நடவெடிக்கைகளில் அரசின் மெத்தனத்தை சுட்டி காட்டும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், கமலை பத்திரிகையாளர் பாண்டே விமர்சனம் செய்தார்.
பாண்டேவின் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அவரிடம் சரமாரியான கேள்விகள் கேட்டுளளார். அதில்
” தமிழராக இல்லாத போதும், தெளிவான தமிழில், தந்தி தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளராக… உங்கள் மீது எனக்கு மரியாதை அதிகம். இப்படி தான் நானும் இந்த கடிதத்தை துவங்கிருக்கவேண்டும்..உண்மையில் எப்போதும் உங்கள் மீது எனக்கு கோபம் உண்டு..கேள்வி கேக்கும் இடத்தில அமர்ந்திருப்பவர் தான் அறிவாளி, பதில் சொல்லும் இடத்தில அமர்ந்திருப்பவர் அறிவற்றவன் போல், கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்ல விடாமல் தொடர்ந்து இடைமறிக்கும் பண்பை புழக்கத்தில் கொண்டு வந்தவர் நீங்கள் என்பதால்! கேள்வி கேட்பவர் புத்திசாலி என்றால், பதில் சொல்ல அமர்த்திருப்பவரும் புத்திசாலி என்று மதிப்பவன் தான் உண்மையான அறிவாளி! சரி…
நம் பாரத பிரதமருக்கு எம் தலைவர் எழுதிய கடிதத்திற்கு உங்கள் விமர்சனம் பார்த்தேன். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொது இடை மறுக்கவோ தடை விதிக்கவோ யாரும் இல்லாதது உங்களுக்கு மிக சௌகரியம்.. சும்மாவே ஆடுபவருக்கு சலங்கை கட்டிவிட்டால்? ஜனக் ஜனக் பாயல் பாஜே தான் …மூச்சு விடாமல் பேசுகிறீர்கள்? பேட் பண்ண ஆள் இல்லாத போது ஆள் இல்லாத போது பால் போட்டுவிட்டு அவுட் என்று கத்துவது போல் உள்ளது.. உங்களுக்கு எப்போதுமே நீங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்ற ஒரு மனப்பான்மை.. உங்கள் statistical கேள்விகளுக்கு பலர் பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! எனக்கு உங்களிடம் சில கேள்விகளே…
சுனாமியை போல் கொரானாவும் ஓர் காலை திடீரென்று தான் நம் நாட்டிற்குள் வந்ததா..? இதுபோல பல கேள்விகளை கேட்டு பாண்டேவை திணற வைத்துள்ளது.