தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் உள்ளனர். அதில் சினேகா-பிரசன்னா ஜோடியும் ஒன்று. சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தபோது பிரசன்னாவுடன் ஒரு படம் நடித்ததில் இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவரின் வீட்டாரின் சம்மதத்தோடு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த அழகிய ஜோடிக்கு கடந்த ௨௦௧௫ ஆம் ஆண்டு விகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது, சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் சினேகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொலைக்காட்சிகளிலும் பங்கேற்று வந்தார். பிரசன்னாவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து துணை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகராகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினேகா கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று தனது இரண்டாம் குழந்தையான ஆத்யானந்தா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார் சினேகா.

இந்நிலையில் தன்னுடைய எட்டாவது திருமணநாளை இன்ஸ்டாகிராமில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தன் கணவர் பிரசன்னாவுடன் இந்த எட்டு வருடங்களில் ஏற்பட்ட நட்பு பற்றியும் அதில் பகிர்ந்துள்ளார்.
மேலும் சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்த எட்டு வருட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது போன்ற இனிமையான நினைவுகள் என் வாழ்வில் தொடரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.










