90 ‘ஸ் நடிகைகளில் பலர் திருமணமாகி குழந்தை, குடும்பம் என செட்டிலாகி விட்டார்கள், இந்நிலையில் 90 பிரபலமான நடிகைகளில் ஒருவர் இன்னும் திருமணம் ஆகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
அவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய “புது புது அர்த்தங்கள்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சித்தாரா. இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் பல படஙக்ளில் நடித்தார்.
புது வசந்தம், காவல் கீதம், என்றும் அன்புடன், படையப்பா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டும் அல்லாது கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். வயதாகி விட்டதால் தற்போது அம்மா,அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.
45 வயதை தாண்டிய சித்தாரா மற்ற நடிகைகள் போல் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார். இது பற்றி அவர் பேட்டி ஒன்றில், என் வாழ்க்கையில் முக்கியமான நபரான என் அப்பாவை இழந்த பின் நான் என் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை, இனிமேல் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.