Tuesday, May 7, 2024
-- Advertisement--

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை சமந்தா…!!! வெளியான ஒர்கவுட் வீடியோ.

சமந்தா நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின் ஆன்மீகச் சுற்றுலா இமயமலைக்கு சென்று வந்த சமந்தா தற்பொழுது தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கதீஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து உள்ளார்.

தற்பொழுது அந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து டப்பிங் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சமந்தா தற்பொழுது யசோதா படத்தின் சூட்டிங் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். யசோதா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என கூறிவருகிறார்கள் படக்குழுவினர்.

ஹாலிவுட் டோலிவுட் என்று பிஸியாக இருக்கும் சமந்தா எப்போதும் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடலை கச்சிதமாக வைத்திருப்பர். அடுத்தடுத்த பட பிடிப்பு இருப்பதால் கடுமையான ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார் தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles