சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. இவர் நடித்த படங்களில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும். இவர் முதல் முதலில் “பாணா காத்தாடி” என்ற படத்தில் முரளியின் மகன் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர். சூர்யாவின் “அஞ்சான்” படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார் அந்த படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்தார்.
முதல் முதலாக பிகினி உடை அணிந்து அந்த படத்தில் நடித்து இருந்தார். சமந்தாவிற்கு கவர்ச்சி ஒர்கவுட் ஆகாது என்று கூறியவர்கள் எல்லாம் ஆச்சர்யப்படும் அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்தார் சமந்தா. அதன் பின் தெலுங்குவிலும், தமிழ் படங்களிலும் படவாய்ப்புகள் குவிந்தது.
அதன் பின் தமிழில் முன்னணி நடிகர் தளபதி விஜயுடன் “தெறி”, “கத்தி”,”மெர்சல்” என்று மூன்று வெற்றி படங்களில் நடித்தார். இதன் இடையில் தெலுங்கு படங்கள் நடிக்கும் போது நகராஜுன் மகன் நாகசைதன்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகிய இருவரும் காதலித்து இரு குடும்பத்தரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
ரசிகர்களுடன் அன்பாக பழக கூடிய சமந்தா. தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொள்வாராம். சமீபத்தில் சமந்தா தனது ரசிகருடன் எடுத்து கொண்ட செல்பி
அடிக்கடி எதாவது புகைப்படங்களை இணையத்தில் சமந்தா தனது ரசிகர்களுக்காக வெளியிடுவார். ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது ரசிகர்கள் சமந்தாவின் பெர்சனல் விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். சமந்தா படித்த பள்ளியின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் அவர் கமெர்ஸ் படித்த கல்லூரியின் சான்றிதழ் என்று அவரை சார்ந்த அனைத்து விஷயங்களும் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதனை ரசிகர் ஒருவர் ஷேர் செய்ய சமந்தா அந்த ரசிகரிடம் இது எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று ட்விட்டர் வழியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னும் என்ன என்ன விஷயங்கள் வெளிவரப்போகுதோ யாராவது hack செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்களோ என்ற குழப்பத்தில் இருக்கிறது சமந்தா தரப்பு.