தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் சாக்ஸி. இவர் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும், ரஜினி நடித்த காலா படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக விருப்பப்பட்டு பல இடங்களில் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் இவர் கலந்து கொண்டார்.
இந்த சீசனில் கலந்துகொண்ட 16 போட்டிகளில் சாக்ஷிக்கும் ஒருவர். ஆனால் தான் வந்த வேலையை விட்டுவிட்டு கவினுடன் டூயட் பாடுவது காதலென்று சுற்றித் திரிவது, பின் ஒரு சிறிய சாக்லேட் பிரச்சினையால் தன் காதலை முறித்துக் கொள்வது என இருந்தார். இந்த சீசனில் கலந்துகொண்ட சிறிது காலங்களிலேயே மக்களால் சாக்ஷி வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் தற்பொழுது சின்ட்ரெல்லா, அரண்மனை3 மற்றும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சாக்ஷி சமீபகாலமாகத்தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நீல நிற உடையில் மிகவும் அழகாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் நீங்கள் வெளிநாட்டு ராணி போல் உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .