Monday, May 20, 2024
-- Advertisement--

நீச்சல்குளத்தில் பிரபல நடிகை ராதிகா புகைப்படத்தை வெளியிட்ட அவரது மகள்..!!!

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பதை தனது நடிப்பால் வெளிப்படுத்தி தமிழில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்ற நடிகை.

கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் இன்றும் நிற்காமல் சென்று கொண்டே இருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உண்டு.

எந்த ஒரு கதாபாத்திரம் நடித்தாலும் கனகச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தும் நடிகை ராதிகாவுக்கு இன்றுவரை பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. ராதிகா மலையாள நடிகரும் மற்றும் இயக்குனருமான பிரதாப் போத்தன் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் ஒரு சில காரணங்களால் அவரை பிரிந்து இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சரட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்தான் ரயான் ஹார்டி. அதன்பின் 2021 ஆம் ஆண்டு நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் ராதிகா.

தற்பொழுது சீரியலில் இருந்து விலகி கணவர் சரத்குமாரின் அரசியல் செயல்பாட்டுக்கு கூடவே துணை நின்றார். ஏன் என் கணவர் சரத்குமார் CM ஆகக்கூடாது அவருக்கு அழகு இல்லையா, திறமை இல்லையா, தகுதி இல்லையா என்று கேட்டு வந்தவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தனது கணவர் கட்சியினை கூட்டணியில் இணைத்து கொண்டார். தற்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் முடிவுகளைப் பார்த்து சற்று வருத்தத்தில் உள்ள ராதிகா கணவரின் கட்சியை எப்படி கொண்டு போகலாம் என்ற ஆலோசனை நடத்தி வருகிறார்..

இந்நிலையில் ராதிகாவின் மகள் ரயான் மிதுன் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நீச்சல்குளத்தில் தனது அம்மா ராதிகாவுடன் தான் உள்ளது போல
புகைப்படத்தை வெளியிட்டு இந்த நாட்களை மிஸ் செய்கிறேன் அம்மா என்று பதிவு ஒன்றை போட்டுள்ளார் ராதிகாவின் மகள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles