Sunday, May 19, 2024
-- Advertisement--

கோலாகலமாக நடைபெற்ற நடிகை நக்க்ஷத்ராவின் திருமண வைபோகம்…!!! கலக்கல் புகைப்படங்கள்.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நக்க்ஷத்ரா நாகேஷ். கடந்த 2014ஆம் ஆண்டு தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

நடிகை நக்க்ஷத்ரா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி பல முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி கண்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற தொடரில் நக்க்ஷத்ரா கதாநாயகியாக வருகிறார். நடிகை நக்க்ஷத்ரா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அதோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். தற்போது நக்க்ஷத்ரா அவரது காதலர் ராகவை திருமணம் செய்து உள்ளார்.

மேலும் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles