மஞ்சிமா மோகன் தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்து இருந்தார். மஞ்சிமாவின் நடிப்பு மிக எதார்த்தமாக இருந்தது முதல் படத்திலே. அதன் பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து வந்த மஞ்சிமா தற்பொழுது “களத்தில் சந்திப்போம்” , “FIR ” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : கொரானோ எங்கே ஆரம்பித்ததோ அங்கேயே அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது…! முழு விவரம் உள்ளே.
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் நடிகைகள் சமூகவலைத்தளத்தில் தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர். மஞ்சிமா இன்று அன்னையர் தின வாழ்த்தினை சொல்லி தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சு அசல் அம்மா போலவே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.