தமிழில் ரஜினி நடித்த பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் இந்த சினிமாவின் இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் இந்த படம் முழுவதும் சேலை கட்டி வந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையே தன் சேலையால் இழுத்தார்.
இந்நிலையில் இவருக்கு அடுத்த படமே நடிகர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இவர்தான் ஹீரோயின். இது குறித்த புகைப்படங்களும் பாடல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் மாளவிகாவும் இந்தப் படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத வீட்டிலேயே பொழுதை கழித்து வரும் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். தொடர்ந்து தன் தின பழக்கவழக்கங்களையும் பழைய புகைப்படங்களின் தூசி தட்டி பதிவிட்டு வரும் மாளவிகா, சமீபத்தில் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.