Sunday, May 19, 2024
-- Advertisement--

16 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ரிஎன்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. அவர் தமிழில் கள்ளழகர், முதல்வன், தில், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன், பரமசிவம் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை லைலா தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். நடிகை லைலா கடைசியாக திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். நடிகை லைலா சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் சிறப்பு விருந்தினராக வந்து நடித்திருந்தார்.

நடிகை லைலா கடந்த 2006 ஆம் ஆண்டு மெஹ்தி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை லைலா. கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லைலா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை பி.எஸ் மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

சங்கி பாண்டே, முனீஸ்காந்த், முரளி சர்மா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்து வருகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles