கொரோனா நோய் தொற்று உலகநாடுகளை மிரளவைத்து வரும் ஒரு வைரஸ். இந்த நோய் தொற்று சீனாவில் தொடங்கி இன்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் பரவி வருவதால் இந்தியா அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடைபிடித்து இந்த தொற்று பரவாமல் அதிக அளவிற்கு பரவாமல் தடுத்து வந்தனர்.
தற்பொழுது கொரோனா நோய் தொற்று பரவும் எணிக்கை அதிகம் இருந்தாலும் அதில் இருந்து குணம் அடைத்து வீடு திரும்போர் எணிக்கையும் அதிகமாக உள்ளது. அதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்ந்து வருகிறார்கள். நேற்று ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்தார்கள் மத்திய அரசு.
தற்போது இந்த நோய் தொற்று காரணமாக நாளுக்கு நாள் இறந்து கொண்டும் இருக்கிறார்கள். நேற்று பிரபல நடிகை குஷ்பு அவர்களின் நெருங்கிய சொந்தம் ஒருவர் மும்பையில் வசித்து வந்தார். அவர் நேற்று கொரோனா நோய் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இதனை குஷ்பு நேற்று அவரது ட்விட்டரில் தெரிவித்தார். குஷ்புவின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்புக்கு ரசிகர்களும், திரைத்துறை சார்ந்தவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.