Thursday, May 2, 2024
-- Advertisement--

பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பூ…!!! அதிர்ச்சியில் தொண்டர்கள்.

பாஜகவின் 42வது நிறுவனம் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கட்சி கொடி ஏற்றப்பட்டது. சென்னை தி.நகர் அலுவலக வாயிலில் உள்ள கொடி கம்பத்தில் நடிகை குஷ்பூ பாஜக கொடியை ஏற்றினர். அனால் அவர் ஏற்றிய கொடி தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஷ்பூ இன்று காலை பாஜக சால்வை அணிந்து கொண்டு, காவி தொப்பி அணிந்து விழாவிற்கு வந்திருந்தார் .குஷ்பு கொடியை ஏற்றி வைத்து சிறிது நேரம் பேசி விட்டு திரும்பிய பிறகுதான் இந்த சம்பவம் அவர்களின் கவனத்திற்கு வந்தது. பாஜக கொடி தலைகீழாக பறந்தது குறித்து அப்பகுதி மக்கள் உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து சென்று கொடியை மாற்றி ஏற்றினர். நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்து அனைவரும் அறிந்ததே. குஷ்புவின் இந்த செயலால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இன்று தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம், தொகுதி, பூத் என அனைத்து பகுதிகளிலும் பாஜக நிறுவன தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு தொடங்கியுள்ள பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் மோடி கட்சியின் 42-வது நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles