தமிழில் பை ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா இதற்கு முன்பு மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் நடித்த படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, நான் ஒரு சில தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் வரலாறு மற்றும் ஆட்டோகிரேப் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் அதிகமாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் தான் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார் ராதாகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரியும் சிவில் இன்ஜினியர். இவருக்கு சாய் ரிஷி என்கிற மகன் 2010 ஆம் ஆண்டு பிறந்தார்.
திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆன கனிகா சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள கனிகா, தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் உள்ளன.
சில விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் கனிகா சமீபத்தில் ஒரு ஹாம் வேர் துணிக்கு விளம்பரம் தந்துள்ளார். அதாவது நைட்டி போன்ற உடைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளார் இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.