தமிழ் சினிமாவில் பலர் அறிமுகம் ஆகின்றனர். சில படங்களில் மிக பெரிய வெட்றயை அவர்கள் பெற்று விட்டு சிறிது காலத்திலே காணாமல் பொய் விடுகின்றனர்.
அதுபோல தான் இந்த நடிகையும், இவர் மறைந்த நடிகர் முரளி நடித்த இதயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ஹீரா. இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதன் பிறகு திருடா திருடா, சதி லீலாவதி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நடிகர் அஜித்துடன் நடித்த போது இருவருக்கும் இடையில் பல கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ஹீரா காதலை அஜித் ஏற்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்த சர்ச்சையால் ஹீராவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இவர் சினிமாவை விட்டு விலகி புஷ்கர் மாதவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் இவர் விவாகரத்து பெற்றுவிட்டார். தனிமையில் இருந்து வந்த இவர் தற்போது என்.ஜி.ஓ உதவி மையம் வைத்து பராமரித்து வருகிறார். மேலும் புத்தக எழுத்தாளராகவும் இருந்து புகழ் பெற்று வருகிறார்.