Wednesday, May 8, 2024
-- Advertisement--

விஜய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா…!!! குஷியில் ரசிகர்கள்.

நடிகை அனுஷ்கா தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் மாதவனின் ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற மொபைலா மொபைலா என்ற பாடல் அனுஷ்காவின் மொத்த அழகையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்க அடித்தது.

அனுஷ்கா தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. அதேபோல தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். அரேபியன் குதிரை என்று தான் சினிமா வட்டாரத்தில் அனுஷ்காவை அழைப்பார்களாம் அந்த அளவிற்கு கனகச்சிதமாக உடம்பை வைத்திருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டினார்.

அந்தப் படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி குண்டாக காண பெற்றார். ஒரு படத்திற்காக அனுஷ்கா மெனக்கெடுவது பார்த்து அனைவரும் பாராட்டி வந்தார்கள் ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆன பின் படம் பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா இந்த படத்திற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்க வேண்டாமே என்று கூறி வந்தார்கள்.

படமும் சொல்லும் அளவிற்கு இல்லாததால் நொந்துபோன அனுஷ்கா மறுபடியும் தனது உடலை மெலிதாக்க யோகா செய்து வந்தார். யோகா செய்து தனது உடலை குறைத்து விடலாம் என்று எண்ணி கடினமான உடற்பயிற்சிகள் செய்து வந்தார் ஆனால் அவருடைய உடல் பழையபடி கட்டுக்கோப்பாக வராமல் போனது.அனுஷ்காவின் உடல் வாகு தான் அவருடைய பெரிய பிளஸ் ஆனால் தற்பொழுது அவருடைய உடல் கட்டுக்கோப்பாக இல்லாமல் ஊதிப் போய் இருப்பதால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார்.

கிரீடம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நடிகை அனுஷ்கா இறுதியாக நடித்த சிங்கம் 3 படத்திற்கு பிறகு நேரடியாக தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது விரைவில் இப் படத்துக்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாக உள்ளது. இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles