Wednesday, May 8, 2024
-- Advertisement--

அனுஷ்கா வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு ஆர்யாவுடன் அந்த படத்தில் நடித்தது தான்..!!! இணையத்தில் பரவி வரும் புகைப்படம்.

அரேபியன் குதிரை என்று செல்லமாக ரசிகர்கள் அழைக்கப்படும் நடிகை அனுஷ்கா. தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு பெரிய பிரபலத்தை தேடி தந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற மொபைலா மொபைலா பாடலில் தாராளம் காட்டியதால் அனுஷ்காவின் கவர்ச்சியில் திக்குமுக்காடினார் ரசிகர்கள்.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான அருந்ததி என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அவர் நடித்ததில் சிங்கம் 1 , சிங்கம் 2 , வேட்டைக்காரன் லிங்கா, என்னை அறிந்தால், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட பாகுபலி முதல் பாகம் மற்றும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் தேவசேனா எண்ணும் கதாபாத்திரத்தில் நடத்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அனுஷ்கா வாழ்க்கையில் செய்த பெரிய தவறு ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்தது தான். தனது உடல் எடையை அதிகரித்து அந்த படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை கூடிய அனுஷ்கா பல முயற்சிகள் செய்தும் தன் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டார்.

யோகா பயிற்சியாளராக இருந்த போதும் அவரது உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் அரேபியன் குதிரை போல இருந்த அனுஷாவிற்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

தற்போது ஓராண்டிற்கு மேலாக படங்களில் நடிக்காமல் இருந்த அனுஷ்காவின் தற்போதைய தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவா இது பேசாமல் ஆர்யா படத்தில் நடிக்காமல் இருந்தர்களாம் என்று சமூகவலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles