அனுஷ்கா ஷெட்டி தமிழில் மாதவனின் “ரெண்டு” என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் வரும் மொபைலா மொபைலா என்ற பாடல் பெரிய ஹிட் ஆனது அந்த நேரத்தில் அனுஷ்காவின் கவர்ச்சியும் இளைஞர்களை திக்குமுக்காட வைத்தது. அதன் பின் தமிழில் படவாய்ப்புகள் குவிந்தது. தமிழ் ரசிகர்களால் “அரேபியன் குதிரை” என்று செல்லமாக அழைக்கப்பட்டார் அனுஷ்கா.

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தில் இருந்தார் அனுஷ்கா. ஸ்லிம்மாக இருந்த அனுஷ்கா “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக 80 கிலோ உடல் எடையை கூட்டினார். அதன் பின் அந்த உடம்பை குறைக்க முடியாமல் அவதி பட்டு வந்தார். பல யோகா செய்தும் அந்த பழைய வசீகரமான உடல் இல்லாததால் ஒரு சில படவாய்ப்புகள் இழந்தார். பாகுபலி படத்தில் அனுஷ்கா உடலை ஸ்லிம்மாக காட்ட கிராபிக்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஏழு வருடங்களுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் வீட்டில் விசேஷம்…!!! சந்தோஷத்தில் ஜி.வி. பிரகாஷ்.
தற்பொழுது முதல் முதலாக தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அனுஷ்கா. தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.