நடிகை அஞ்சலி தமிழுக்கு அறிமுகமான முதல் படமே இயக்குனர் ராமின் கற்றது தமிழ் என்ற படம் தான் அந்த படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி. நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். குறிப்பாக இயக்குனர் வசந்தபாலனின் அங்காடித்தெரு என்ற படத்தில் அஞ்சலி தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி நடித்திருப்பார்.
அஞ்சலி என்றால் கிளாமரான ரோலில் நடிக்கமாட்டார். என்பவர்களுக்கு இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு படத்தை பார்த்த அனைவரும் அஞ்சலி இப்படி கிளாமராக நடிப்பாரா என்று ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பின் நிறைய படங்களும் அஞ்சலிக்கு புக் ஆனது. தெலுங்கு படங்களிலும் அஞ்சலி பிஸியானார்.
தற்பொழுது அஞ்சலியின் படு கிளாமரான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மினி கவுன் ஒன்றை அணிந்து கொண்டு செம கிளாமராக பொது இடத்தில் போஸ் கொடுத்துள்ளார். அஞ்சலியா இப்படி என்று ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.