தமிழ் சினிமாவால் தற்போது ஊரடங்கு காரணமாக சினிமா துறையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு முடிந்த பின் சினிமா துறை கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக உள்ளவர் நடிகை ஆர்த்தி கணேஷ். இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலம் ஆனார். இவருடன் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து வந்த மாஸ்டர் கணேஷை இவர் காதல் திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் சம்பளத்தை 20 சதவீதம், 40 சதவீதம் என குறைத்து வந்த நிலையில் இவர் தன் சம்பளம் வரும் ஒரு வருடத்திற்கு வெறும் ரூ . 1 மட்டும் தான் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.