Sunday, May 19, 2024
-- Advertisement--

‘மீண்டும் மாமாவாகிட்டேன்’ சந்தோஷத்தில் நடிகர் விஷால் பதிவிட்ட ட்வீட்…!!! குவியும் வாழ்த்துக்கள்.

நடிகர் விஷால் முதலில் நடிகர் அர்ஜுனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதன்பின் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய ஆசைப்பட்ட ஜிகே ரெட்டி அவர்கள் விஷாலை செல்லமே என்ற படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் பெற்ற மாபெரும் வெற்றியினால் அதனைத் தொடர்ந்து “சண்டக்கோழி”, “திமிரு” போன்ற ஆக்சன் படங்களில் நடிக்கத் தொடங்கினார் விஷால்.

ஆக்சன் படங்கள் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டுமே ஒத்துவரும் விஷாலுக்கு ஆக்சன் பக்காவாக பொருந்தியதால் ஆக்சன் நிறைந்த கதைகளை விஷாலுக்கு நிறைய வந்தது. அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்ற இடத்தை பிடிப்பதற்கு படாத பாடுபட்டார் விஷால்.

Ac

நடிகர் விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வினோத்குமார் இயக்க ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் மீண்டும் மாமா ஆகியிருக்கேன். என் தங்கைக்கு ஒரு இளவரசி பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இன்ஷா அல்லாஹ் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஷால் இன்ஷா அல்லாஹ் என்று பதிவிட்டு இருப்பதற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles