தமிழ் நடிகர்களில் மறுக்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இந்த இடத்தை பிடிப்பதற்கு இவர் நிறைய சிரமங்களை தாண்டி வர வேண்டி இருந்தது. தற்போது இவரிடம் கதை சொல்லி படம் இயக்க பல இயக்குனர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தில் இவர் தான் வில்லன். ஒரு சாதாரண துணை நடிகராக இருந்த இவர் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் சம முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளிவந்த 9 ருபாய் நோட்டு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜயும் கலந்துகொண்டார். அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுவதை ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த் வீடியோ தற்போது மீண்டும் வைரலாகின்றது. வீடியோவில் 40 :15 நிமிடத்தில் பார்க்கவும்.










