நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவர் மேடை பேச்சுக்களில் கடவுள்களை பற்றி பேசுவது வழக்கமான ஒன்று தான்.
கடந்த ஆண்டு சபரி மலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சொன்ன போட்டு அதற்கு எதிராக பெண்களே வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நான் கேரளா அரசிற்கு ஆதரவாக உள்ளேன், பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள், மாதவிடாய் பெண்களுக்கு தீட்டு கிடையாது, அது மிகவும் புனிதமானது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
சமீபத்தில் நடந்த மாஸ்டர் பட வெளியிட்டு விழாவின் போது கூட மேடையில் கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுபவனை நம்பாதே, நான் தான் கடவுள் என்று சொல்லுபவனையும் நம்பாதே, கஷ்ட காலத்தில் மனிதனை மனிதன் தான் காப்ற்றமுடியும் என்று கூறினார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி பேத்தியின் போது இந்து கடவுள்கள் அபிஷேகம் செய்வதை காட்டும் போது ஏன் அலங்காரம் செய்வதை காட்டுவதில்லை என கூறி உள்ளார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது.