Friday, May 3, 2024
-- Advertisement--

ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்தவுடன் தன் நண்பர் விவேக் வீட்டிற்கு சென்ற விஜய்..!!! விவேக்கை இழந்து தவித்து கொண்டு இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக தகவல்.

நடிகர் விவேக் பல வருடங்களாக நம்மை சிரிக்க வைத்த மனிதர் இன்று இல்லை என்பது யாராலும் நம்ப முடியவில்லை. பலருக்கு அறிவுரை சொல்லும் மனிதர், நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு கொண்டு சேர்க்க விரும்பும் மனிதர் தற்போது இல்லை. கலாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற பாடுபட்டு வந்த மனிதர் மாரடைப்பால் இறந்த செய்தியை இன்றும் நம்ப முடியவில்லை ரசிகர்களால்.

நடிகர் விவேக்கும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். விஜய் படங்களில் விவேக் செய்த காமெடிகளால் சூப்பர்ஹிட்டான ஆன படங்களும் உண்டு. பிரியமானவளே படத்தில் டேய் விஜய் டேய் விஜய் என்று அவர் விஜயிடம் பேசும் வசனங்கள் உண்மையாகவே அவருடைய நெருங்கிய நண்பர்கள் பேசிக் கொள்வது போல இருக்கும். நிறைய படங்களில் விஜயுடன் சேர்ந்து நடித்த விவேக் சமீபத்தில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பிகில் படத்தில் கோச்சாக நடித்திருந்தார்.

விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கை பார்த்து பொதுவா குழி பறிக்கிறவங்கள பார்த்த அவங்க மேல கோபம் தானே வரணும் ஆனால் இவர் மேல ஒரு மரியாதை வருகிறது அந்த மரங்கள் எல்லாம் நடுராறுல அதை சொல்ற என்று விஜய் கூறியதற்கு விவேக் எழுந்து சிரித்து கொண்டே நன்றி சொல்லும் விதம் சுவாரசியமாக இருந்தது.

விவேக் அவர்கள் மறைந்த பொழுது விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்துள்ளார். விவேக் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் தவித்துப் போன விஜய் அங்கிருந்து உடனே கிளம்ப முடியாதபடி சூழ்நிலை இருந்ததால் நேற்று தான் ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்து இறங்கினார்.

சென்னை வந்தவுடன் தனது வீட்டிற்கு சென்ற விஜய் சில மணி நேரத்தில் விவேக்கின் வீட்டிற்கு சென்று உள்ளார். தனது நண்பர் விவேக் குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles