தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய பட்ட பெயர் இளையதளபதி விஜய் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. இவருடைய ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ரஜினிக்கு அடுத்து இவர் தான் மாஸான நடிகர் என்று இவர் ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்.
இவர் இந்த இடத்திற்கு முன்னேற பல சிரமங்களை தாண்டவேண்டி இருந்தது. விஜய் பிகில் படத்தை தொடர்ந்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கொரானோ ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஆகிறது.
இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் பள்ளியில் படித்துவருகிறாள், மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார். தற்போது கொரானோ உலகெங்கும் பரவி வருவதால் சஞ்சய் இந்தியாவிற்கு வருவதில் சிரமம் உள்ளது.
இதனால் மகன் இக்கட்டான சூழ்நிலையில் தனிமையில் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தத்தில் உள்ளாராம் விஜய்.