தமிழில் நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் அஸ்வின். இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மங்காத்தா, சூர்யா, 7 ஆம் அறிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் மேகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றதை தொடர்ந்து ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் தொல்லை காட்சி, நீர்திரை, இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய நான்கு படங்கள் வெளிவர உள்ளது. அது மட்டும் இன்றி மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து செல்கிறது, இந்த வீடியோ ஒன்றை பார்த்து அவர் ஒரு குரங்கிற்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்து அதை கயிற்றில் கட்டி குழந்தையை கடத்த வைக்கிறார்கள், என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? உண்மையில் இதுமாதிரியான மனிதர்கள் தான் உண்மையான வைரஸ். இதோ அந்த ட்விட்.