Friday, May 3, 2024
-- Advertisement--

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் சூர்யா…!!!

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேசமயம் இந்த இடைவெளியில் பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கி விட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது.

இதையடுத்து துவங்கப்பட்ட திட்டம் தான் இல்லம் தேடி கல்வி இந்தத் திட்டம் மூலம் ஆசிரியர்கள் வீடு தேடி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க உள்ளனர். இதை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கப்பட்டுள்ளன நிலையில் இது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள.

அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது “இனிது இனிது கற்றல் இனிது” இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களுடைய கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நம்ம மாணவ மாணவிகள் உடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும் படிக்கவும் கல்வி ஆர்வலர்கள் சொல்லித் தரப் போகிறார்கள்.

உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும் ஊர் மக்களும் ஊக்குவிப் போம் உறுதி செய்வோம். நமக்குள்ள கல்வி மீது ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் சூர்யா பேசியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles