Sunday, May 12, 2024
-- Advertisement--

நடிகர் கமலுடன் கைகோர்த்த நடிகர் சிம்பு…!!! மாஸாக வெளிய ‘Blood and Battle’ 48 ஆவது படத்திற்காக ப்ரோமோ.

தமிழ் சினிமாவில் புதிய கூட்டணியாக நடிகர் கமலஹாசன் மற்றும் சிம்பு இருவரும் இணையுள்ளதாக கோலிவுட் திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக இன்று மாலை 6.30 அளவில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

அதில் சிம்பு தான் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வரப்போகிறது என கூறி வந்தனர். இந்த நிலையில் மாலை 6:30 மணி அளவில் நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து ப்ரோமோ ஒன்றும் ரெடியாகி உள்ளது.

மேலும் அந்த புரோமோவில் ‘Blood and Battle’ 48 என்கின்ற கேப்ஷனுடன் நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

இன்று வெளியான போது மிரட்டலாக உள்ளதால் இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமோ என சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படத்தைப் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles