தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு இவர் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்திரனின் மூத்த மகன் ஆவார். சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வந்தன. இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்ததன் மூலம் இவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.
அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இவரின் மார்க்கெட் சற்று குறைய ஆரம்பித்தது. இவரின் சக நடிகர்களான ஆர்யா, விஷால், பரத், ஜெயம் ரவி, ஜீவா போன்றோர் திருமணமாகி ஒரு கமிட்டெட் லைஃபில் இருக்கும் நிலையில் இவர் மட்டும் இன்னும் சிங்கிள் ஆகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் நிறைய நடிகைகளுடன் கிசுகிசுக்களில் அடிபட்டார்.
அதில் முக்கியமானவர் நயன்தாரா இவரும் நயன்தாராவும் காதலிப்பதாகவும் இருவரும் பிரிந்துவிட்டார்கள் எனவும் செய்திகள் வெளிவந்த நிலையில் இவர் மீண்டும் நடிகை ஹன்சிகாவை காதல் செய்தார், இதற்கு இருவருமே சம்மதம் தெரிவித்தனர். இவர்கள் காதலும் கூடிய சீக்கிரமே முடிந்து விட்டது.
இந்நிலையில் தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் சிம்பு, எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அண்மையில் இவர் விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷுடன் சமையல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. இதில் விடிவி கணேஷ் சிம்புவிடம் உனக்கு பொண்டாட்டி வரவ எப்படி சமைப்பாளோ.. என்று கேட்டதற்கு சிம்பு பொண்டாட்டினா வேலைக்காரியா? அவ சமையல் மட்டும்தான் செய்யணுமா? வர பொண்டாட்டி எப்படி தாங்கணுமும் தெரியுமா? என்று பதில் பேச்சுக் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் சிம்புவை கலாய்த்து வருகின்றனர்.